உதவி தேவையா பங்களிப்பை தர தயார்: மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு
By: Nagaraj Sun, 05 Nov 2023 09:41:45 AM
சென்னை: பங்களிப்பை தரத் தயார்... தமிழக மாணவர்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வுக்காக ஏதாவது உதவி தேவை என்றால் தனது பங்களிப்பை தரத் தயார் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் மாற்றம் என்ற தொண்டு நிறுவனத்தின் விழாவில் மாணவர்களிடையே பேசிய ஆளுநர், இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகி ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
8 கிலோ மீட்டர் தூரம் வெறும் காலில் நடந்து சென்றது, மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்தது போன்ற எதுவும் தனது வளர்ச்சிக்கு தடையாக இருந்தது இல்லை.
விருப்பப்படுவது மட்டுமின்றி, கடினமாக உழைத்தால், மாணவர்கள் எந்த உயரத்தையும் எட்ட முடியும் என்று கூறியுள்ளார்.
Tags :
barefoot |
walked |
growth |