Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த ஜூலை மாதத்தில் பணவீக்கம் 6.71 சதவீதமாக குறைந்துள்ளது

கடந்த ஜூலை மாதத்தில் பணவீக்கம் 6.71 சதவீதமாக குறைந்துள்ளது

By: vaithegi Sat, 13 Aug 2022 4:02:21 PM

கடந்த ஜூலை மாதத்தில் பணவீக்கம்  6.71 சதவீதமாக குறைந்துள்ளது

இந்தியா ; நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பதை பொறுத்து தான் அனைத்து அன்றாட பொருட்களின் விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதை அடுத்து கடந்த ஜூன் மாதத்தில் பணவீக்கம் 7.75% ஆக இருந்தது. ஜூன் மாதத்தில் மட்டுமல்லாமல் கடந்த 3 மாதங்களாகவே பணவீக்கம் 7% க்கும் மேலாகவே இருந்து வந்தது.

ஆனால் இதற்கு பின் பணவீக்கம் குறையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஐஐபி தரவுகளின்படி மே மாதத்தில் பணவீக்கம் 19.6% ஆக இருந்தது. இதற்கு பிறகு ஜூன் மாதத்தில் 12.3% ஆக இருந்து வந்தது. மேலும் அதே போன்று உற்பத்தி துறையிலும் ஜூன் மாதத்தில் வளர்ச்சி விகிதமானது 12.5% ஆக இருந்தது மற்றும் ஜூன் மாதத்தில் சுரங்கத் துறை 7.5% ஆகவும், மின்சார துறையில் வளர்ச்சி விகிதம் 16.4% ஆகவும்உயர்ந்தது.

inflation,july ,பணவீக்கம்  ,ஜூலை

மேலும், கடந்த ஜூன் மாதத்தில் நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லறை பணவீக்கத்தின் விகிதம் 7.01% ஆக இருந்தது. இதற்கு பிறகு ஜூலை மாதத்தில் நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லறை பணவீக்கத்தின் விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதை தொடர்ந்து ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கத்தின் விகிதம் 6.71 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது, சில்லறை பணவீக்கத்தின் விகிதம் குறைந்ததால் மட்டுமே உணவு பொருட்களின் விலை கணிசமாக குறைந்து வருகிறது. இதே போல் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லறை பணவீக்கத்தின் விகிதம் 5.59 சதவீதமாக இருந்தது.

Tags :