Advertisement

ஸ்பெயினில் பணவீக்கம் கடுமையாக அதிகரிப்பு

By: Nagaraj Sat, 24 Sept 2022 6:07:37 PM

ஸ்பெயினில் பணவீக்கம் கடுமையாக அதிகரிப்பு

ஸ்பெயின்: பணவீக்கம் அதிகரிப்பு... ஐரோப்பிய நாடுகளிலேயே ஸ்பெயினில் தான் பணவீக்கம் கடுமையாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காலநிலை மாற்றம், ரஷ்யா - உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறது. இதனால் ஐரோப்பிய மண்டலத்தில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வட்டி விகிதத்தை ஐரோப்பிய மத்திய வங்கி அதிகரித்துள்ளது.

inflation,increase,spain,average wage,decrease ,பணவீக்கம், அதிகரிப்பு, ஸ்பெயின், சராசரி ஊதியம், குறைவு

அந்த வகையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். எரிவாயு, உணவு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து விலைகளும், கட்டணங்களும் உயர்ந்துள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிலேயே ஸ்பெயினில் தான் பணவீக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது.

அதே போல் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் சராசரி ஊதியம் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலிலும் ஸ்பெயின் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு இந்த ஆண்டு எதிர்வரும் குளிர்காலத்தில் பணவீக்கம் மேலும் அதிகரித்து காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|