Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்

By: vaithegi Sun, 15 Oct 2023 5:22:55 PM

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்

இந்தியா: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜனவரி மாதத்தில் ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.

அதன் பின், ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு தற்போது வரையிலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாத நிலையில் அகவிலைப்படி உயர்வு எப்போது என்று பெரும் ஆவலுடன் ஊழியர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலைப்படி உயர்வு மற்றும் நிலுவையில் உள்ள டிஏ பாக்கிகள் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

central govt ,அகவிலைப்படி ,மத்திய அரசு ஊழியர்

பொதுவாக அகவிலைப்படி உயர்வு ஃபிட்மெண்ட் ஃபாக்டரை பொறுத்தே வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.60 மடங்குகளாக இருக்கும் நிலையில் 3.0 ஆக உயர்த்த கோரிக்கைகளை வைக்கப்பட்டு உள்ளது.

எனவே இதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படலாம் என்று ஒரு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், தற்போது வரையிலும் மத்திய அரசின் சார்பில் எவ்வித அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகநிலையில் ஊழியர்களின் மத்தியில் குழப்பம் நிலவி கொண்டு வருகிறது.

Tags :