- வீடு›
- செய்திகள்›
- செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிய உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிய உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்
By: vaithegi Fri, 30 June 2023 10:15:41 AM
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பின்வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது ... மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, அமலாக்க துறையின் கைது செய்யப்பட்டார். மேலும் அத்துடன் அவர் ஜூலை 12-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இதற்கு இடையே நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, காவிரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அவரது உடல் அவரது மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமிக்கும், மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும் அளிக்கப்பட்டது. ஆனால் அதேசமயம் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத (Minister without portfolio)அமைச்சராகத் தொடர்வார் என்றும் முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டார் .
இதனையடுத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து உடனடியாக நீக்குவதாக உத்தரவிட்டார். அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்தால் வழக்கு விசாரணை நியாயமாக நடக்காது என்றும், அமைச்சரவையில் செந்தில் பாலாஜி தொடர்வது வழக்கு விசாரணையை பாதிக்கும் என்றும், போலீஸ் விசாரணையும், சட்ட நடவடிக்கைகளையும் தடுக்கும் நோக்கில் அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்துவதாக செந்தில் பாலாஜி மீது புகார் எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், ஆளுநர் பின்வாங்கியிருக்கிறார்.இதையடுத்து இதுதொடர்பாக ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்க ஆளுநர் முடிவு செய்துள்ளதாகவும் த்கவல் வெளியாகி உள்ளது.