Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகளிர் உரிமைத்தொகை குறித்த சில அறிவிப்புகள் விரைவில் வெளியாகி வாய்ப்பு இருப்பதாக தகவல்

மகளிர் உரிமைத்தொகை குறித்த சில அறிவிப்புகள் விரைவில் வெளியாகி வாய்ப்பு இருப்பதாக தகவல்

By: vaithegi Mon, 20 Nov 2023 3:09:09 PM

மகளிர் உரிமைத்தொகை குறித்த சில அறிவிப்புகள் விரைவில் வெளியாகி வாய்ப்பு இருப்பதாக தகவல்

சென்னை: தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் இதுவரை 1 கோடியே 6 லட்சம் பேருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டது.

அதன் பின் இந்த மாதம் மேல்முறையீடு செய்த 7.35 லட்சம் பேருக்கு 2 ஆம் கட்டமாக உரிமைத்தொகை வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்வு வர இருக்கும் நிலையில், இந்த திட்டத்தில் சில தளர்வுகள் வழங்க இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது.

Tags :