Advertisement

வரும் 8ம் தேதி பூரண சந்திர கிரகணம் ஏற்படவுள்ளதாக தகவல்

By: Nagaraj Thu, 03 Nov 2022 11:34:19 AM

வரும் 8ம் தேதி பூரண சந்திர கிரகணம் ஏற்படவுள்ளதாக தகவல்

கொழும்பு: வரும் 8ம் தேதி பூரண சந்திர கிரகணம் ஏற்படவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த பகுதி சந்திர கிரகணம் ஆசியா, அவுஸ்ரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளுக்கு முழு சந்திர கிரகணமாக தோன்றும் என்று பேராசிரியர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

total lunar eclipse,colombo,people,sri lanka,eastern horizon ,முழு சந்திர கிரகணம், கொழும்பு, மக்கள், இலங்கை, கிழக்கு அடிவானம்

கிழக்கு அடிவானத்தில் இருந்து மாலை 5.48 மணிக்கு சந்திரன் உதயமாகவுள்ள நிலையில், அதன் இறுதிப் பகுதி மாத்திரம் இலங்கை மக்களுக்கு பகுதி சந்திர கிரகணமாக தென்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, எதிர்வரும் 8ஆம் திகதி மாலை 6.19 மணிக்கு சந்திரகிரகணம் நிறைவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முழு சந்திர கிரகணம் 2025ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் திகதி மீண்டும் உலகுக்குத் தெரியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|