- வீடு›
- செய்திகள்›
- தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பேசியதாக தகவல்
தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பேசியதாக தகவல்
By: vaithegi Sun, 11 June 2023 10:02:59 AM
சென்னை: அமித் ஷா ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தொலைபேசியில் பேச்சு ..... பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன. இதையடுத்து இந்த 9 ஆண்டுகால அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் மே 30 முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை பாஜக நடத்தி கொண்டு வருகிறது.
அந்த வகையில் வேலூர் பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் இன்று நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா ,வி. கே. சிங் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். எனவே இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு சென்னை வந்தடைந்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மகாராஷ்டிராவிலிருந்து விமானம் மூலம் 9.30 மணியளவில் சென்னை வந்தடைந்தார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் அமித்ஷாவை வரவேற்றனர்.
தமிழகம் வந்து உள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பேசியதாக தகவல் வெளியாகிவுள்ளது. தமிழக அரசியல் சூழல், சட்டம் ஒழுங்கு நிலை பற்றி பேசியிருக்கக்கூடும் என்று தகவல் வெளியாகிவுள்ளது.