Advertisement

வலி நிறைந்த நாளின் துக்கத்தை அனுசரிக்கும் ஜப்பான்

By: Nagaraj Sat, 06 Aug 2022 6:46:31 PM

வலி நிறைந்த நாளின் துக்கத்தை அனுசரிக்கும் ஜப்பான்

ஜப்பான்: வலி நிறைந்த நாள்... உலக அமைதியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் போரின் காயங்களும் வடுக்களும் என ஜப்பான் தனது எட்டு தசாப்த கால வலி நிறைந்த நாளின் துக்கத்தை அனுசரிக்கிறது.

ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் புதிய ஆயுதப் போட்டிக்கு அஞ்சும் சர்வதேச நாடுகளின் கவலைகளுக்கு மத்தியில் ஹிரோஷிமாவில் உலகின் முதல் அணுகுண்டு தாக்குதலின் 77 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அஞ்சலி நிகழ்ச்சிகள் அனுசரிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 6, 1945 அன்று காலை 8:15 மணிக்கு, அமெரிக்காவின் B-29 போர் விமானம் எனோலா கே, "லிட்டில் பாய்" என்ற புனைப்பெயர் கொண்ட குண்டை வீசி ஹிரோஷிமா நகரத்தை அழித்தது.

அந்த அணுகுண்டு தாக்குதலை அனுசரிக்கும் வகையில், ஹிரோஷிமாவில் மணிகள் ஒலிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பிப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த நிலையில், நேற்று உக்ரேனிய அணுமின் நிலையத்தின் மீது ஷெல் துப்பாக்கி தாக்குதல் நடைபெற்றது. இது, உலகின் முதல் அணுகுண்டு தாக்குதல் நடைபெற்றதை அதிகம் நினைவுபடுத்துவதாக உள்ளது.

life,livelihood,russia,people,painful day ,வாழ்க்கை, வாழ்வாதாரம், ரஷ்யா, மக்கள், வலி நிறைந்த நாள்

1945 ஆகஸ்ட் ஆண்டு இறுதிக்குள் 1,40,000 பேரை பலிவாங்கிய குண்டுவெடிப்பின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஹிரோஷிமா நகரத்தின் மையத்தில் உள்ள அமைதிப் பூங்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள். அவர்களுடன் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெசும் கலந்து கொண்டார்.

"அணு ஆயுதங்கள் முட்டாள்தனமானவை. அவை பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்காது. மரணம் மற்றும் அழிவு மட்டுமே. முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகு, 1945 இல் இந்த நகரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று குட்டெரெஸ் கூறினார்.

உக்ரைன் மீதான போரை தொடுத்திருக்கும் ரஷ்யாவை இந்த ஆண்டு நினைவு விழாவிற்கு அழைக்கவில்லை என்று ஹிரோஷிமா மேயர் கசுமி மாட்சுய் தெரிவித்தார். மாஸ்கோவின் இராணுவ நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய அவர், "சர்வதேச அளவில் அமைதி என்பது அணுசக்தியை தடுப்பதில் தான் இருக்கிறது என்ற கருத்து மேலும் வலுவாகிறது" என்று மேலும் கூறினார்.

"உக்ரைன் மீது படையெடுத்திருக்கும் ரஷ்யா, மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டோம் என்பதை மறந்து, போர்க் கருவிகளாக மக்களைப் பயன்படுத்துகிறார், தங்கள் நாட்டு மக்களின் நலனை மட்டுமல்ல, வேறு நாட்டில் உள்ள பொதுமக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரங்களிலும் அவர் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்" என்று கூறினார்.

Tags :
|
|
|