Advertisement

புதிய உச்சத்தை தொட்ட மல்லிகைப்பூ விலை

By: Monisha Fri, 25 Dec 2020 08:30:52 AM

புதிய உச்சத்தை தொட்ட மல்லிகைப்பூ விலை

மதுரை மல்லிகைப்பூவுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. அதன்காரணமாக மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு தினமும் 10 டன்னுக்கும் அதிகமான பூக்கள் விற்பனைக்காக சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படும். தற்போது பனிக்காலமாக இருப்பதால், கடந்த சில நாட்களாக பூக்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

வரத்து குறைவாக இருப்பதாலும், பண்டிகை காலமானதாலும் மதுரை மார்க்கெட்டில் மல்லிகைப்பூவின் விலை பலமடங்கு உயர்ந்து நேற்று ஒரு கிலோ ரூ.3,500-க்கு விற்பனையானது. தீபாவளி பண்டிகை சமயத்தில் மல்லிகை பூவின் விலை ரூ.2 ஆயிரமாக இருந்தது. அதன்பின்னர் மல்லிகைப்பூவின் விலை படிப்படியாக குறைய தொடங்கியது. தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது.

jasmine,winter,festive,pistachio,price ,மல்லிகைப்பூ,பனிக்காலம்,பண்டிகை,பிச்சிப்பூ,விலை

வைகுண்ட ஏகாதசி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு மல்லிகை பூவின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூவின் விலை காலை நேரத்தில் ரூ.2,500-க்கு விற்பனையானது. அதன்பின்னர் நேரம் செல்ல செல்ல விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.3,500-க்கு விற்பனையானது.

இதுபோல் ஒரு கிலோ பிச்சிப்பூவின் விலை ரூ.1,200 முதல் ரூ.1,600 வரை இருந்தது. முல்லை ஒரு கிலோ ரூ.1,200, அரளி ரூ.300, செவ்வந்தி ரூ.200, மெட்ராஸ் மல்லி ரூ.1,000, கனகாம்பரம் ரூ.2,000, பட்டன்ரோஸ், தாமரை உள்ளிட்ட பூக்களின் விலையும் அதிகமாக இருந்தது. பூக்களின் விலை அதிகமாக இருந்ததால், பலர் பூக்கள் வாங்காமலேயே திரும்பி சென்றனர். மேலும், மல்லிகைப்பூவின் விலை பொங்கல் பண்டிகை வரை உயர்வாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

Tags :
|