Advertisement

கேரளாவில் நாளை உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை

By: Nagaraj Tue, 15 Dec 2020 8:51:34 PM

கேரளாவில் நாளை உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை

நாளை வாக்கு எண்ணிக்கை... கேரளத்தில் மூன்று கட்டங்களாக நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.

கேரளத்தில் உள்ள 14 மாவட்டங்களுக்கு டிச.8-ம் தேதி முதல் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 76.63 சதவீத பேர் வாக்களித்துள்ளனர். இதில் கடந்த டிச.8-ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தோதலில் 75 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

டிச.10-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தோதலில் 76.78 சதவீதம் போ வாக்களித்தனா். டிச.14-ஆம் தேதி நடைபெற்ற இறுதிகட்ட தேர்தலில் 78.62 சதவீதம் பேர் வாக்களித்தனர். இந்த தேர்தலில் அதிகபட்சமாக கோழிக்கோடு மாவட்டத்தில் 78.98 சதவீதம் போ வாக்களித்தனா்.

election results,vote count,social gap,tomorrow ,தேர்தல் முடிவுகள், வாக்கு எண்ணிக்கை, சமூக இடைவெளி, நாளை

மேலும், அந்தந்த மாவட்ட தலைமையகத்தில் பாதுகாப்புப் படையின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள வாக்கு பெட்டிகளை எண்ணும் பணி நாளை (டிச.16) நடைபெறவுள்ளது.

கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியை கடைபிடித்து வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால், தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம் எனத் தெரிகின்றது.

Tags :