உத்தரகாண்டில் இன்று பெய்த கனமழையால் நிலச்சரிவு - 3 பேர் உயிரிழப்பு
By: Karunakaran Mon, 20 July 2020 3:43:56 PM
தற்போது வட இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் வட இந்தியாவில் பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. தற்போது, அசாமில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழைக்கு 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
டெல்லியில் நேற்று 3 மணி நேரம் இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக, டெல்லி நகரமே ஸ்தம்பித்தது. இந்நிலையில் ஜார்க்கண்டில் உள்ள மட்கோட் என்ற கிராமத்தில் இன்று பேய்மழை பெய்தது. இதனால் அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டது.
ஒரே இடத்தில் பெய்த மழை காரணமாக, வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த வெள்ளம் காரணமாக அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு காரணமாக அங்கிருந்த வீடுகள் வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்பட்டது. இந்த நிலச்சரிவு காரணமாக 3 பேர் உயிரிழந்தனர்.
மேலும் இந்த நிலச்சரிவு காரணமாக, மட்கோட் அருகில் உள்ள கிராமத்தில் 8 பேர் காணவில்லை. அதன்பின் இதுகுறித்து மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின், சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.