Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வடஇந்தியாவில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மித அளவிலான பரவலாக மழை பெய்ய வாய்ப்பு

வடஇந்தியாவில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மித அளவிலான பரவலாக மழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Sat, 28 Jan 2023 2:11:33 PM

வடஇந்தியாவில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மித அளவிலான பரவலாக மழை பெய்ய வாய்ப்பு

புதுடெல்லி: 2 நாட்கள் லேசானது முதல் மித அளவிலான பரவலாக மழை .. வடமேற்கு இந்தியாவில், பஞ்சாப், அரியானா, சண்டிகர் மற்றும் மேற்கு உத்தர பிரதேசம், கிழக்கு உத்தர பிரதேசம் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மித அளவிலான பரவலாக மழை பெய்ய கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எனவே இதன்படி, நாளை மற்றும் நாளை மறுதினம் 2 நாட்களுக்கு இந்த சூழல் காணப்படும். இதேபோன்று, ராஜஸ்தானில் இன்றும், நாளையும் லேசானது முதல் மித அளவிலான பரவலாக மழை பெய்ய கூடும் என்று தெரிவித்துள்ளது.

rainfall,north india,meteorological centre ,மழை ,வடஇந்தியா,வானிலை மையம்

இதையடுத்து கடந்த சில வாரங்களாக கடுங்குளிர் நிலவி வந்த சூழலில், மேற்கு நோக்கி வீச கூடிய காற்றால் குறைந்தபட்ச வெப்பநிலையானது, இன்று 3 டிகிரி செல்சியசில் இருந்து 5 டிகிரி செல்சியசாக அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நாளை லேசான மழை பெய்ய கூடும்.

மேலும் மேற்கு இமயமலை பகுதியில் ஒரு சில இடங்களில் நாளையும், நாளை மறுநாளும் கனமழை அல்லது பனிப்பொழிவு இருக்க கூடும். வடமேற்கு இந்தியாவில் நாளையும், நாளை மறுநாளும் மணிக்கு 20 முதல் 30 கி.மீ. வரையிலான வேகத்துடன் கடுமையான காற்று வீசும். ராஜஸ்தானில் ஒரு சில இடங்களில் இன்று தரை பகுதியில் பனிபடர்ந்து காணப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :