Advertisement

மெட்ரோ ரயில் சேவை இன்று நீட்டிப்பு

By: vaithegi Fri, 27 Oct 2023 3:06:07 PM

மெட்ரோ ரயில் சேவை இன்று நீட்டிப்பு


சென்னை : ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை இன்று இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவிப்பு .... சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிட்டப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.

எனவே இதையொட்டி, சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கான பயண போக்குவரத்து செலவின தொகையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஏற்று உள்ளது.

metro rail service,metro rail administration ,மெட்ரோ ரயில் சேவை, மெட்ரோ ரயில் நிர்வாகம்

எனவே, போட்டியை பார்த்துவிட்டு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவை இன்று இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ரசிகர்கள் போட்டிக்கான டிக்கெட்டை ரசிகர்கள் போட்டிக்கான டிக்கெட்டை பயன்படுத்தி எந்தவித கட்டணமும் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யலாம். 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags :