Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மழை நாட்களில் பால் தடையின்றி கிடைக்க வேண்டும்... அமைச்சர் உத்தரவு

மழை நாட்களில் பால் தடையின்றி கிடைக்க வேண்டும்... அமைச்சர் உத்தரவு

By: Nagaraj Sat, 19 Nov 2022 9:53:41 PM

மழை நாட்களில் பால் தடையின்றி கிடைக்க வேண்டும்... அமைச்சர் உத்தரவு

சென்னை: மழைநாட்களில் தமிழக முழுவதும் பால் மற்றும் பால் உப பொருள்கள் தங்கு தடை இன்றி கிடைக்க வேண்டும் என அமைச்சர் நாசர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வந்தது. அதே சமயம் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன.

இதனிடையே இனிவரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் எனவும் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மழைநாட்களில் தமிழக முழுவதும் பால் மற்றும் பால் உப பொருள்கள் தங்கு தடை இன்றி கிடைக்க வேண்டும் என அமைச்சர் நாசர் உத்தரவிட்டுள்ளார்.

minister,order,milk,monsoon,people,study meeting ,அமைச்சர், உத்தரவு, பால், பருவமழை, மக்கள், ஆய்வு கூட்டம்

சென்னையில் நடந்த பால் கொள்முதல் குறித்த ஆய்வு கூட்டத்தில் பேசிய அமைச்சர், பால் பண்ணைகளை கட்டுப்பாட்டு அறைகள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். கால்நடைகளை பாதிக்கும் நோய்கள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் பருவமழை காலங்களில் தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் உப பொருள்கள் தங்கு தடை இன்றி கிடைக்க வேண்டும் எனவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Tags :
|
|
|