Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று டாஸ்மாக் மது விற்பனை தொடர்பான முக்கிய ஆலோசனைக்கூட்டம்

அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று டாஸ்மாக் மது விற்பனை தொடர்பான முக்கிய ஆலோசனைக்கூட்டம்

By: vaithegi Mon, 10 July 2023 11:03:09 AM

அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று டாஸ்மாக் மது விற்பனை தொடர்பான முக்கிய ஆலோசனைக்கூட்டம்

சென்னை: அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று ஆலோசனைக்கூட்டம் ... மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் பல்வேறு முக்கிய நிர்வாகிகளுடன் இன்று டாஸ்மாக் மது விற்பனை தொடர்பான முக்கிய ஆலோசனைக்கூட்டம் நடைபெறவுள்ளது . இதையடுத்து இந்த ஆலோசனைக்கூட்டத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகள் பற்றி ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது, கணினிமயமாக்கப்பட்ட ரசீது வழங்குவது, அதிகவிலைக்கு மதுபானங்கள் விற்பதை தடுப்பது மற்றும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.

consultation meeting,tasmac,minister muthuswamy ,ஆலோசனைக்கூட்டம் ,டாஸ்மாக் ,அமைச்சர் முத்துசாமி

மேலும் கட்டுப்பாட்டு அறை அமைப்பது மற்றும் பிரச்சனைக்குரிய டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.டாஸ்மாக் கடைகளில் டெட்ரா பேக் களில் மது விற்பனை செய்வது, மாவட்ட வாரியாக வாட்ஸ்அப் குழுக்கள் அமைப்பது தொடர்பாகவும் முக்கிய முடிவு எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதைத்தொடர்ந்து சமீபத்தில் 500 மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ள நிலையில் மேலும் இதனை அதிகப்படுத்தலாமா என்பது குறித்தும் முக்கியமாக ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|