பழுதான லிப்டில் சிக்கி 4 நாட்களாக தவித்த தாய், மகள் மீட்பு
By: Nagaraj Tue, 21 July 2020 9:10:21 PM
பழுதான லிப்டில் சிக்கி தாய், மகள் மீட்பு... சீனாவில் பழுதான லிப்டில் சிக்கிய தாயாரும் மகளும் உயிர் பிழைக்க ஒருவருக்கொருவர் சிறுநீரைச் சேகரித்து குடித்து வந்த நிலையில் நான்கு நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளனர்.
தாயாரும் மகளும் வசித்து வந்த நான்கு மாடி குடியிருப்புக்குள் அமைந்திருந்த லிப்டில் இருவரும் மாடிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென லிப்ட் பழுதடைந்ததாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் 82 வயதான தாயாரும் அவரது 64 வயதான மகளும் சிக்கியுள்ளனர்.
செய்வதறியாது திகைத்துப் போன இருவரும் உதவிக்கு அழைத்தும் ஏமாற்றமே
மிஞ்சியுள்ளது. இதனையடுத்து உயிர் பிழைக்க ஒருவருக்கொருவர் சிறுநீரைச்
சேகரித்து குடித்துள்ளனர்.
சுமார் 96 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு
குழுவினரால் தாயார் மற்றும் மகள் மீட்கப்பட்டுள்ளனர். தாயும் மகளும்
அண்மையில் ஜியான் நகரில் உள்ள கயாக்சின் மருத்துவமனையில் இருந்து பூரண
குணம் பெற்று திரும்பிய பின்னர் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த
பெண்களுக்கு சிகிச்சையளித்த டாக்டர் யின் கூறும்போது, அவர்களின் சமயோசித
முடிவாலையே, பழுதான லிப்டில் நான்கு பகல் மற்றும் மூன்று இரவுகள்
சிக்கியிருந்தும் அதிசயமாக உயிர் பிழைத்ததாக கூறி உள்ளார்.