Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு

By: Nagaraj Wed, 08 June 2022 10:55:56 AM

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு

வேலூர்: மத்திய அரசு தலையீடு உள்ளது... மேகதாது விவகாரம் குறித்து காவிரி ஆணையத்தில் விவாதிக்க அனுமதிக்கமாட்டோம், எதிர்ப்போம். இதில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம்சட்டியுள்ளார்.

வேலூர் மாவட்டம் சேனூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள ஆர்.ஜி முல்லை நகரில் பகுதிநேர கூட்டுறவு நியாய விலை கடையைத் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், காட்பாடி ஒன்றிய பெருந்தலைவர் வேல்முருகன், துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

minister,online,gambling,federal government,prohibition,information ,அமைச்சர், ஆன்லைன், சூதாட்டம், மத்திய அரசு, தடை, தகவல்

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், " காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க, ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. இதனை அனுமதிக்க மாட்டோம் எதிர்ப்போம்.இதற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தையும் அணுகுவோம்.

டெல்லியில் வரும் 17-ல் காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க தமிழகம் அரசு எதிர்க்கிறது.மேகதாது அணை விவகாரத்தில் தமிழக நலன் காக்க அனைத்து நடவடிக்கையும் எடுப்போம். தமிழகத்தில் உள்ள நதிகள் அளவீடு எடுக்கப்பட்டு வருகிறது. பலரும் நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளார்கள் என்ற ஒரு நிலைப்பாடு இருக்கிறது. அதை எல்லாம் அகற்ற வேண்டும். பொது மக்கள் நலனுக்காகவே செய்கிறோம்.

ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி. அமைச்சராக இருந்தாலும் சரி. யாராக இருந்தாலும் ஆக்கிரமிப்பு செய்து இருந்தால் அதை அகற்றப்படும். குற்றம் சாட்டிய எதிர்கட்சி தலைவரே ஆக்கிரமிப்பு செய்து இருந்தாலும் அகற்றப்படும். நானே ஆக்கிரமிப்பு செய்து இருந்தாலும் அகற்றப்படும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு" என்றார்.

Tags :
|