Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெலாரஸ் போராட்டங்களின் ஒருங்கிணைப்பளர்களில் முக்கிய நபரை கடத்திச்சென்ற மர்மநபர்கள்

பெலாரஸ் போராட்டங்களின் ஒருங்கிணைப்பளர்களில் முக்கிய நபரை கடத்திச்சென்ற மர்மநபர்கள்

By: Karunakaran Tue, 08 Sept 2020 10:12:50 AM

பெலாரஸ் போராட்டங்களின் ஒருங்கிணைப்பளர்களில் முக்கிய நபரை கடத்திச்சென்ற மர்மநபர்கள்

ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்து தனி நாடான பெலாரஸ் நாடு, ஒரு ஐரோப்பிய நாடாகும். அந்நாட்டில் 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபர் தேர்தல் நடைபெற்றது. அப்போது, அலெக்சாண்டர் லூகாஷென்கோ வெற்றிபெற்றார். அதன்பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அலெக்சாண்டரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். கடந்த மாதம் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் அலெக்சாண்டர் 80.23 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்ததால், அவர் 6-வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அலெக்சாண்டருக்கு எதிராக போட்டியிட்ட பிரதான எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா 8.9 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

kidnap,key person,coordinators,belarusian struggles ,கடத்தல், முக்கிய நபர், ஒருங்கிணைப்பாளர்கள், பெலாரஷ்ய போராட்டங்கள்

இந்த தேர்தலில் வெளியான முடிவுகள் மோசடியானவை. அதிபர் அலெக்சாண்டர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் எதிர்கட்சி சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிபர் அலெக்சாண்டர் தனது பதவியில் இருந்து விலகி அதிகாரத்தை எதிர்க்கட்சியிடம் ஒப்படைப்பது தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு ஒன்று எதிர்க்கட்சி சார்பில் அமைக்கப்பட்டது. இந்த குழுவில் பிரதான எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா, வெரோனிகா டிசிப்கலோ மற்றும் மரியா கொலிஸ்னிகோவா என்ற மூன்று பெண்கள் முக்கிய நபர்களாக உள்ளனர்.

தேர்தல் முடிவுக்கு வந்த சில நாட்களில் ஸ்வியாட்லானா மற்றும் டிசிப்கலோ ஆகிய இருவரும் பெலாரசை விட்டு தப்பிச்சென்று அண்டை நாட்டில் தஞ்சம் அடைந்தனர். மரியா கொலிஸ்னிகோவா மட்டும் பெலாரசிலேயே இருந்து எதிர்க்கட்சிகள் சார்பில் நடைபெற்று வந்த போராட்டங்களுக்கு தலைமை தாங்கி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தார். தற்போது மரியா கொலிஸ்னிகோவாவை மர்ம நபர்கள் நேற்று காலை கடத்திச்சென்றுள்ளனர். ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த சிலரும் மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளனர். இதனால் பெலாரசில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :
|