Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய கல்வி கொள்கை ஆய்வுகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் ஊக்கம் அளிக்கும் - ஜனாதிபதி ராம்நாத்

புதிய கல்வி கொள்கை ஆய்வுகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் ஊக்கம் அளிக்கும் - ஜனாதிபதி ராம்நாத்

By: Karunakaran Sun, 20 Sept 2020 8:01:08 PM

புதிய கல்வி கொள்கை ஆய்வுகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் ஊக்கம் அளிக்கும் - ஜனாதிபதி ராம்நாத்

‘உயர் கல்வியில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துதல்’ என்ற பெயரில் நடைபெற்ற மாநாட்டில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் கல்வியை மேம்படுத்தும் வகையிலும், அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் புதிய தேசிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டு உள்ளதாக கூறினார்.

மேலும் அவர், கல்வியில் சர்வதேச அளவில் இந்தியாவை ஒரு சக்திவாய்ந்த நாடாக மாற்றும் மிகப்பெரிய பொறுப்பு உயர்கல்வி நிறுவனங்களுக்கு உள்ளது. இந்த நிறுவனங்களில் வழங்கப்படும் தரமான கல்வியை அளவுகோலாக கொண்டு மற்ற கல்வி நிறுவனங்களும் சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். தேசிய கல்வி கொள்கையை திறம்பட செயல்படுத்துவதன் மூலம் அந்த பெருமையை நம்மால் மீட்டெடுக்க முடியும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

new education policy,research,innovation,president ramnath ,புதிய கல்வி கொள்கை, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, ஜனாதிபதி ராம்நாத்

மனப்பாடம், மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், மாணவர்கள் தங்களுக்கு எந்த துறையில் ஆர்வமும், திறமையும் உள்ளதோ, அதன் அடிப்படையில் தேவையான பாடப்பிரிவை எடுத்து படிக்க இந்த கல்வி திட்டம் வழிவகை செய்வதாகவும், புதிய கல்வி கொள்கையில் 2035-ம் ஆண்டுக்குள் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கையை 50 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

அதன்பின் மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் பேசுகையில், புதிய கல்வி கொள்கையின் மூலம் கல்வியின் தரம் மேம்படும். நாட்டில் கல்விமுறையை பரவலாக்கவும், வலுப்படுத்தவும் உதவும். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்து ஆலோசித்து புதிய கல்வி கொள்கையை நிறைவேற்றுவதில் உள்ள தடைகள் நீக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags :