Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் 6 வார காலத்திற்குள் ஏற்படுத்தப்படும் ......மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

தமிழக மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் 6 வார காலத்திற்குள் ஏற்படுத்தப்படும் ......மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

By: vaithegi Wed, 15 June 2022 8:14:23 PM

தமிழக மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் 6 வார காலத்திற்குள் ஏற்படுத்தப்படும் ......மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

தமிழகம் : தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கென பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளித்தும் வருகிறது. உலகமெங்கும் பள்ளி படிப்பு வரை உயர்கல்வி வரை இலவசமாக கல்வி வழங்கி வருகிறது.

அதனை தொடர்ந்து பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாவலரும் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் உடல் குறைபாட்டை கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு ஊண்டுகோள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி கொண்டே வருகிறது.

disabled,metro rail,metro administration ,மாற்றுத்திறனாளி,மெட்ரோ ரயில்,மெட்ரோ நிர்வாகம்


இந்நிலையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்று திறனாளிகளுக்கு போதிய வசதிகள் ஏதும் இல்லை என்று வைஷ்ணவி ஜெயக்குமார் மெட்ரோ நிறுவனத்தின் மீது உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு மெட்ரோ நிர்வாகம் மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் 6 வார காலத்திற்குள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. புதிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய வசதிகளுடன் கட்டப்படும் எனவும் நீதிமன்றத்தில் மெட்ரோ நிர்வாகம் பதிலளித்துள்ளது.

அனைத்து பொது இடங்களிலும் மாற்றுதிறனாளிகளுக்கென சில சிறப்பு ஏற்பாடுகள் அந்தந்த துறை சார்பாக செய்யப்படுகிறது. இதன் மூலம் மாற்றுதிறனாளர்களும் வெளிஇடங்களில் பயணம் செய்து வருகின்றனர். பேருந்துகளில் அவர்களுக்கென தனி இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதே போலவே, ரயில் நிலையங்களிலும் மாற்றுதிறனாளிகளுக்கு உரிய வசதிகள் உள்ளது. தற்போது மெட்ரோ ரயில் நிலையங்களிலும் ஏற்படுத்தப்பட உள்ளது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags :