பயணிகளுக்காக மெட்ரோ ரயில்கள் இயக்குவது குறித்து அறிவிப்பு
By: Nagaraj Sat, 31 Oct 2020 7:08:54 PM
மெட்ரோ ரயில்கள் இயங்குவது குறித்து அறிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள், தங்கள் பகுதிகளுக்குச் செல்ல ஏதுவாக நவம்பர் 2-ஆம் தேதி காலை 5.30 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தில் தளா்வளிக்கப்பட்டதையடுத்து, மெட்ரோ ரயில்கள் காலை 7 முதல் இரவு 9 மணி வரை இயக்கப்பட்டு வருகின்றன.
தொடர் விடுமுறையையொட்டி, வியாழக்கிழமை (அக்.29) அன்று மெட்ரோ ரயில்கள் இயங்கும் நேரம் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
அதே
போல், விடுமுறை முடிந்து திரும்பி வரும் பயணிகளின் வசதிக்காக காலை 7 மணி
முதல் இயக்கப்படும் மெட்ரோ ரயில், நவம்பர் 2-ஆம் தேதி காலை 5.30 மணி முதல்
இரவு 9 மணி வரை இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சனிக்கிழமை
வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.