Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் சுற்றினால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் சுற்றினால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

By: Nagaraj Sat, 11 July 2020 9:34:57 PM

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் சுற்றினால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

தனிமைப்படுத்தபட்டவர்கள் வெளியில் செல்கிறார்களா?... வெளி ஊர்களில் இருந்து கோவை வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் வெளியே சென்றால் மாநகராட்சியின் தொலைபேசி எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் சூழலில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினர் இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

பொதுவாக வெளியூர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கோவை வருபவர்களுக்கு அதிக அளவில் தொற்று இருப்பதால் அவ்வாறு வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

minister,sp velumani,coimbatore,twitter,complaint,report ,
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை, டிவிட்டர், புகார், தெரிவிக்கலாம்

இதில் பலரும் அவர் அவர் வீடுகளிலெர்யே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டோரை மாநகராட்சி அதிகாரிகள் வீடியோ கால் மூலமாக கண்காணித்து வருகின்றனர்.

இருந்தபோதும் ஒரு சிலர் வீட்டை விட்டு வெளியே வந்து சுற்றி திரிவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் வைரஸ் தொற்று சமூக பரவலாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்றி திரிந்தால் மாநகராட்சியின் தொலைபேசி எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சியில் வெளிநாடு, வெளிமாநிலம், வெளியூரில் இருந்து வந்துள்ள 1,100 நபர்கள், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு மாநகராட்சியால் கண்காணிக்கப்படுகின்றனர்.

Tags :