குடியிருப்பு பகுதிகளில் இரவில் உலா வரும் யானைகளால் மக்கள் அச்சம்
By: Nagaraj Mon, 02 Jan 2023 5:49:41 PM
கோவை: கோவை பகுதியில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் வலம் வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோவை தொண்டாமுத்தூர் இருட்டு பள்ளம் வரப்பாளையம் பொண்ணு ஊத்து சின்ன தடாகம் ஆனைகட்டி போன்ற மலைவாழ் கிராமங்கள் இருக்கின்றன. இப்பகுதியில் உள்ள மலைவாழ் கிராம விவசாயிகள் வாழை சோளம் கரும்பு போன்ற பயிர் வகைகள் பயிரிட்டு வருகின்றனர்.
ஆனால் விவசாய பெருங்குடி மக்கள் இந்த தானிய பயறுகளை காட்டு யானைகள் ஊருக்குள் வந்து சாப்பிட்டுவிட்டு மிதித்து நாசப்படுத்தி விடுகிறது. வனத்துறையினர் எவ்வளவோ முயற்சி செய்தும் யானைகளை ஊருக்குள் வராமல் தடுக்க முடியவில்லை.
மேலும் யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க அகழிகளை வெட்டியதாகவும் அந்த
அகழிகள் 15 ஆண்டுகளுக்கு முன்பே வெட்டியதாகவும் அது இப்பொழுது சரியான
பராமரிப்பு இல்லாததால் யானைகள் ஊருக்குள் வந்து விடுகின்றன. தமிழக அரசும்
வனத்துறையினரும் அகழிகளை சரியான முறையில் பராமரிப்பு செய்தால் யானைகள்
ஊருக்குள் வராமல் தடுத்துவிட முடியும்.
எனவே தமிழக
அரசும் வனத்துறையினரும் எங்களை காப்பாற்ற வேண்டும் என்று மலைவாழ் மக்கள்
கிராம மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள்
இருக்கின்றனர்
என்பது குறிப்பிடத்தக்கது