Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இத்தாலியில் திரையரங்குகள் திறந்தாலும் மக்கள் வருகை தர தயக்கம்

இத்தாலியில் திரையரங்குகள் திறந்தாலும் மக்கள் வருகை தர தயக்கம்

By: Nagaraj Wed, 17 June 2020 12:43:51 PM

இத்தாலியில் திரையரங்குகள் திறந்தாலும் மக்கள் வருகை தர தயக்கம்

திரையரங்குகள் திறந்தாலும் பொதுமக்கள் வர தயக்கம் காட்டுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி தலைநகர் ரோமில், 3 மாதங்களுக்குப் பின் திறக்கப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு வருகை தர பொதுமக்கள் தயங்குகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திரையரங்கு வளாகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டதுடன், சமூக இடைவெளி கடைபிடிப்பதற்காக, இரு நபர்களுக்கு இடையே 2 இருக்கைகள் காலியாக இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

film,people,visits,2 places ,திரையரங்குகள், மக்கள், வருகை, 2 இருக்கைகள்

இருந்த போதும், இத்தாலியில், 34,000 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால், ஒரு சிலர் மட்டுமே திரையரங்குகளுக்கு வருகின்றனர். இதையடுத்து, அரசு அனுமதி அளித்தும், ஏராளமான திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளன.
கொரோனா அச்சத்தால் யாரும் திரையரங்குகள் பக்கம் திரும்பிக்கூட பார்க்காத நிலைதான் தொடர்கிறது. இதனால் திறந்துள்ள திரையரங்குகளும் தொடர்ந்து நடத்துவதா, அல்லது இழுத்து மூடிவிடலாமா என்று யோசிக்கும் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags :
|
|
|