Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுரையில் விரைவில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைக்க திட்டமிடல்

மதுரையில் விரைவில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைக்க திட்டமிடல்

By: vaithegi Sat, 09 July 2022 4:13:23 PM

மதுரையில் விரைவில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைக்க திட்டமிடல்

மதுரை: தமிழகத்தில் அதிகமான கோவில்களை கொண்ட சிறப்பு ஆன்மீக தலமாக மதுரை விளங்கி கொண்டு வருகிறது. 148 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட மதுரை மாநகரில் கிட்டதட்ட 22 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

மதுரையை மாவட்டமாக கொண்ட திருமங்கலம், மேலூர், பெருங்குடி போன்ற பகுதிகளில் குடியிருப்புகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கிறது. இதனால் மதுரையில் வாகன போக்குவரத்தும் மிக பெருகி கொண்டே செல்கிறது. எனவே, வாகன போக்குவரத்து நெருக்கடியையும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மதுரையில் மெட்ரோ ரயில்திட்டம் அமல்படுத்தப்படும் என மு.க.ஸ்டாலின் தலைமையில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மதுரையில் மெட்ரோ ரயில்திட்டத்தை உருவாக்குவதற்கான சோதனையில் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

metro rail,madurai ,மெட்ரோ ரயில்,மதுரை

மேலும், மதுரையில் கூடிய விரைவிலேயே மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து, பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் செய்த சோதனையின் படி மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மெட்ரோ ரயில் மாட்டுத்தாவணியில் துவங்கி கே.கே.நகர், அண்ணாநகர், தெப்பக்குளம், முனிச்சாலை, கீழவாசல், கீழவெளி வீதி, தெற்குவாசல், பெரியார் பஸ் நிலையம், அரசரடி, காளவாசல், பாத்திமா கல்லூரி, ஆனையூர், தபால்தந்தி நகர், பார்க்டவுன், நத்தம் ரோட்டில், மகாலெட்சுமி நகர், மூன்றுமாவடி வழியாக மாட்டுத்தாவணியை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்து திருமங்கலத்தில் இருந்து தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், பெரியார் பஸ்ஸ்டாண்ட், ரயில் நிலையம், யானைக்கல், கோரிப்பாளையம், தல்லாகுளம், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், ஐகோர்ட் கிளை வழியாக மேலூர் வரை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Tags :