Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காவல் நிலைய டேபிள், லத்தியில் ரத்தக்கறை; சாத்தான்குளம் பெண் காவலரின் சாட்சியம்

காவல் நிலைய டேபிள், லத்தியில் ரத்தக்கறை; சாத்தான்குளம் பெண் காவலரின் சாட்சியம்

By: Nagaraj Tue, 30 June 2020 7:21:20 PM

காவல் நிலைய டேபிள், லத்தியில் ரத்தக்கறை; சாத்தான்குளம் பெண் காவலரின் சாட்சியம்

சாத்தான்குளம் விவகாரம் தினமும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. காவல்நிலைய டேபிள், லத்தியில் ரத்தக்கறை படிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், விசாரணைக்கு சென்ற போது, மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் தன்னை வரவேற்கவோ, வணக்கம் கூறவோ இல்லை எனக் கூறினார்.

மேலும், தன்னை அலட்சியமாக நடத்தியதாகவும், மிரட்டல் தொனியில் தனது உடல் அசைவுகளை அவர்கள் வெளிக்காட்டியதாகவும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தெரிவித்தார்.

sathankulam,police station,testimony,bloodshed,guard ,சாத்தான்குளம், காவல் நிலையம், சாட்சியம், ரத்தக்கறை, காவலர்

மேலும் அவர் கூறுகையில், “ஜெயராஜ், பென்னிக்ஸை காவலர்கள் விடிய விடிய லத்தியால் அடித்ததாகவும் காவலர் ரேவதி சாட்சியம் அளித்துள்ளார். சாத்தான் குளம் காவல்நிலைய டேபிள், லத்தியில் ரத்தக்கறை படிந்துள்ளதாக காவலர் ரேவதி கூறினார்.

கட்டாயப்படுத்திய பிறகே லத்திகளை காவல்நிலைய போலீசார் ஒப்படைத்தனர். லத்தியை தர மறுத்த காவலர் மகாராஜனை கையை வைத்து தள்ளி அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. லத்தியை கேட்டபோது மேலும் ஒரு காவலர் குதித்து தப்பி ஓடிவிட்டார்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் விடிய விடிய தாக்கியதாக சாட்சியம் அளித்த காவலர் ரேவதி கடைசியில் கையெழுத்திட மறுத்திவிட்டார். மிகவும் சிரமப்பட்டே காவலர் ரேவதியிடம் கையெழுத்தை பெற முடிந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :