Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொங்கல் பரிசு தொகுப்பு: ரே‌ஷன் கடைகளில் போலீஸ் பாதுகாப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு: ரே‌ஷன் கடைகளில் போலீஸ் பாதுகாப்பு

By: Monisha Tue, 29 Dec 2020 2:44:38 PM

பொங்கல் பரிசு தொகுப்பு: ரே‌ஷன் கடைகளில் போலீஸ் பாதுகாப்பு

தமிழக அரசு சார்பில் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பண்டிகை பரிசாக ரூ. 2,500 ரொக்கம் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ. 1,000 ரொக்கம் வழங்கப்பட்ட நிலையில் இந்த வருடம் ரூ. 2,500 பொங்கல் பரிசாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அனைத்து ரே‌ஷன் கடைகள் மூலம் ஜனவரி 4-ம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.

பொங்கல் பரிசு பெறக்கூடிய 2 கோடியே 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களும் நெரிசல் இல்லாமல் பெற்று செல்ல வீடுகளுக்கு டோக்கன் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த 26-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை டோக்கன் வழங்கப்படுகிறது. எந்த தேதியில் எத்தனை மணிக்கு ரே‌ஷன் கடைக்கு வரவேண்டும் என்று குறிப்பிடப்பட்டு நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்கள் வழங்கி வருகின்றனர்.

ரே‌ஷன் கடைகளுக்கு 1-ம் தேதி புத்தாண்டு விடுமுறை ஆகும். 2 மற்றும் 3-ம் தேதியில் பொங்கல் தொகுப்பினை வழங்குவதற்கான ஏற்பாடுகள் அந்தந்த கடைகளில் செய்யப்பட வேண்டும். 4-ம் தேதி முதல் தினமும் 200 குடும்ப அட்டைகள் வீதம் பொங்கல் பரிசு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பொங்கல் பரிசை வரிசையில் நின்று நெரிசல் இல்லாமல் பெற்று செல்ல விரிவான ஏற்பாடுகளை சிவில் சப்ளை அதிகாரிகள் செய்துள்ளனர்.

family card,pongal gift,ration shop,jam,police ,குடும்ப அட்டை,பொங்கல் பரிசு,ரே‌ஷன் கடை,நெரிசல்,போலீஸ்

இதுகுறித்து சிவில் சப்ளை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- பொங்கல் பரிசு நெரிசல் இல்லாமல் வரிசையில் நின்று பெற்று செல்ல ஏற்பாடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு ரே‌ஷன் கடைகளுக்கும் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பதட்டமான பகுதிகளில் கூடுதலாகவும் போலீசார் பயன்படுத்தப்படுவார்கள்.

ரே‌ஷன் கடை ஊழியர்கள் ஒவ்வொருவரும் பல லட்சம் ரொக்க பணத்தை கையாள்கிறார்கள். ஒரு கடை ஊழியர் தினமும் ரூ. 5 லட்சம் வினியோகிக்கக்கூடும். ரூ. 20 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை ஒவ்வொரு ரே‌ஷன் கடைகள் மூலமும் வினியோகிக்கப்பட இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு அவசியமாகும்.

ஒரு நாளைக்கு ரூ. 1,300 முதல் ரூ. 1,350 கோடி பொங்கல் பரிசு ரே‌ஷன் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் எவ்வித குளறுபடியும் ஏற்படாமல் இருப்பதற்காக போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. சுமார் 70 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அவர் கூறினார்.

Tags :
|