Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாய்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் தபால்சேவை ஊழியர்கள்

நாய்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் தபால்சேவை ஊழியர்கள்

By: Nagaraj Thu, 03 Sept 2020 5:05:13 PM

நாய்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் தபால்சேவை ஊழியர்கள்

நாய் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் ஊழியர்கள்... தபால் சேவை ஊழியர்கள் வீடுகளில் அஞ்சல்களைக் கொடுக்கும்போது, நாய் அச்சுறுத்தலுக்கு உள்ளாகுவதாக கனடா போஸ்ட் தெரிவித்துள்ளது.

இதனால், ‘உங்கள் நாய் எங்கள் ஊழியர்களை அணுகுவதைத் தடுப்பதற்கான ஒரு வழி, அஞ்சலை வழங்கும் நேரத்தில் நாயை வேறொரு அறையில் வைத்திருப்பதுதான்’ என கனடா போஸ்ட ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து கனடா போஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கனடாவில் சுமார் 41 சதவீத வீடுகளில் நாய்கள் உள்ளன. தபால் சேவை ஊழியர்கள் செல்லப்பிராணிகளுடன் அதிகப்படியான அஞ்சல்களைக் கொடுக்கும்போது தொடர்பு கொள்கிறார்கள்.

mail,canada post,owners,dog,threat ,அஞ்சல், கனடா போஸ்ட், உரிமையாளர்கள், நாய், அச்சுறுத்தல்

மேலும் தொற்றுநோய்களின் போது வீட்டில் உள்ளவர்கள் நாயுடன் நேருக்கு நேர் வருவதற்கான வாய்ப்புகள் வழக்கத்தை விட அதிகமாக உள்ளன.

தபால் சேவை ஊழியர்கள் வரும்போது நாய் அச்சுறுத்தும் வகையில் குலைப்பதும், சில சமயங்களில் தாக்கப்பட்டு, கடிப்படும் சம்பவங்களும் நடந்துள்ளன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா போஸ்ட் வீட்டு உரிமையாளர்களிடம் அஞ்சல் விநியோகத்தின் போது கதவுகளைத் திறக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறது. ஏனெனில், இது உடல் ரீதியான தூரத்தை உண்டாக்குகிறது. தபால் சேவை ஊழியர் வீட்டு வாசலில் அஞ்சல் அல்லது பொதிகளை எடுக்கச் செல்லும் வரை அவர்கள் காத்திருக்குமாறு பொதுமக்களை நினைவுபடுத்துகிறார்கள்.

Tags :
|
|
|