Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கள்ளக்குறிச்சி மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் ஜிப்மர் மருத்துவ குழுவிடம் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் ஜிப்மர் மருத்துவ குழுவிடம் ஒப்படைப்பு

By: Nagaraj Tue, 02 Aug 2022 4:52:42 PM

கள்ளக்குறிச்சி மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் ஜிப்மர் மருத்துவ குழுவிடம் ஒப்படைப்பு

சென்னை: ஜிப்மர் மருத்துவ குழுவிடம் ஒப்படைப்பு... கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி விடுதியில் உயிரிழந்த ஸ்ரீமதியின் 2 பிரேத பரிசோதனை அறிக்கைகளும் ஆய்வுக்காக ஜிப்மர் மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி 12ம் வகுப்பு படித்து வந்தார். கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் கடந்த 13ம் தேதி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரியளவில் வன்முறை நடைபெற்றது.

இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கனியாமூர் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவியின் வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

kallakurichi,student,post-mortem,report,jipmer,medical team ,கள்ளக்குறிச்சி, மாணவி, பிரேத பரிசோதனை, அறிக்கை, ஜிப்மர், மருத்துவ குழு

பின்னர் மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிடும்படி கேட்டுக் கொண்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யும்படி உத்தரவிட்டார். மேலும் பிரேத பரிசோதனையின் போது 3 மருத்துவ நிபுணர்களும் உடன் இருந்த நிலையில் அதனை பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டது.

தொடர்ந்து மாணவியின் பெற்றோர்கள் பிரேத பரிசோனை அறிக்கையில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாணவியின் 2 பிரேத பரிசோதனை அறிக்கைகளையும், அதன் வீடியோக்களையும் 3 மருத்துவர்கள் கொண்ட ஜிப்மர் மருத்துவக் குழு மற்றும் தடயவியல் நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.

தொடர்ந்து மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் வீடியோக்களையும் சிபிசிஐடி போலீசார் ஜிப்மர் மருத்துவக் குழுவிடம் ஒப்படைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து மாணவியின் மரணத்தில் இருக்கும் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|
|