Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிங்கராஜ வனத்தின் எல்லை வீதி அபிவிருத்தி பணிகளை பார்வையிட செல்லும் ஜனாதிபதி

சிங்கராஜ வனத்தின் எல்லை வீதி அபிவிருத்தி பணிகளை பார்வையிட செல்லும் ஜனாதிபதி

By: Nagaraj Sat, 29 Aug 2020 5:15:45 PM

சிங்கராஜ வனத்தின் எல்லை வீதி அபிவிருத்தி பணிகளை பார்வையிட செல்லும் ஜனாதிபதி

சர்ச்சைக்குரிய பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொள்ள உள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

உலக மரபுரிமை சொத்தான சிங்கராஜ வனத்தின் எல்லையில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்தி பணிகளை கண்காணிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேரடி விஜயம் மேற்கொள்ளவுள்ளார். சிங்கராஜ வன பகுதிக்கு இன்று விஜயம் மேற்கொண்டு கண்கானிப்பு நடவடிக்கையில் அவர் ஈடுபடவுள்ளார்.

consultation,president,observation,villagers ,ஆலோசனை, ஜனாதிபதி, அவதானம், கிராம மக்கள்

சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, வீதி அபிவிருத்தி தொடர்பிலும், லங்காகம கிராம மக்களின் பிரச்சினை தொடர்பிலும் ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக மரபுரிமையான சிங்கராஜ வனத்தின் எல்லையில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்தி செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags :