Advertisement

மக்காச்சோளம் அறுவடை துவங்கிய நிலையில் விலை வீழ்ச்சி

By: Nagaraj Thu, 31 Dec 2020 12:16:47 PM

மக்காச்சோளம் அறுவடை துவங்கிய நிலையில் விலை வீழ்ச்சி

விலை வீழ்ச்சி... மக்காச்சோளம் அறுவடை துவங்கிய நிலையில், கர்நாடகா, ஆந்திராவில் இருந்து வரத்து அதிகரித்ததால், விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்துார் ஒன்றியம், பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. கோழித்தீவனம், மாவு தயாரிப்புக்கு அதிகளவில் தேவைப்படுவதால், நல்ல விலை கிடைத்து வருகிறது.

maize,fall fall,farmers,andhra ,மக்காச்சோளம், விலை வீழ்ச்சி, விவசாயிகள், ஆந்திரா

கடந்த சீசனின் போது,குவிண்டால்,ரூ.1,800க்கு விற்பனையானது. மக்காச்சோள தட்டுக்கும் நல்ல விலை கிடைத்தது. அதனால், தொண்டாமுத்துார் வட்டாரத்தில் மட்டும், செப்., மாதத்தில், 500 எக்டருக்கும் அதிகமாக நடவு செய்யப்பட்டது.தற்போது, அறுவடை துவங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில், கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து மக்காச்சோளம் வரத்து அதிகரித்துள்ளது. விவசாயிகளிடம் இருந்து, குவிண்டால், ரூ. 1,500க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த சீசனுடன்ஒப்பிடுகையில், குவிண்டாலுக்கு, 300 ரூபாய் சரிந்துள்ளது. கிளி, மயில் உள்ளிட்ட பறவைகளால், 10 சதவீதம் ஆளவுக்கு சேதமான நிலையில் விலை வீழ்ச்சி விவசாயிகளுக்கு கவலையை தந்துள்ளது.

Tags :
|