பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.26 லட்சம் உயர்ந்து, ரூ.2.23 கோடியாக உயர்வு
By: vaithegi Tue, 09 Aug 2022 9:02:03 PM
புதுடெல்லி: பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.26 லட்சம் உயர்ந்து, ரூ.2.23 கோடியாக அதிகரித்துள்ளது என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைஅடுத்து பிரதமர் மோடியிடம் அசையா சொத்துக்கள் ஏதும் இல்லை, அசையும் சொத்துக்கள் மட்டுமே அதிலும் பெரும்பகுதி வங்கி டெபாசிட், அஞ்சலக சேமிப்பு, காப்பீடுகள் மட்டுமே உள்ளன . மேலும் பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு விவரங்களை பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தனக்கு உள்ள சொத்து விவரங்களை பகிர்ந்துள்ளார். இது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பிரதமருக்கு சொந்தமாக கார்கள் எதுவும் இல்லை. அதேவேளையில், பிரதமர்மோடி சொந்தமாக 1.73 லட்சம் மதிப்பு கொண்ட 4 தங்க மோதிரங்கள் வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த ஆண்டை விட பிரதமர் மோடியின் அசையும் சொத்துக்கள் மதிப்பு 26.13 லட்சம் அதிகரித்துள்ளது. காந்திநகரில் பிரதமர் மோடிக்குச் சொந்தமாக இருந்த அவரின் பங்கு நிலத்தையும் தானமாக அளித்துவிட்டார். பிரதமர் மோடி தன்னிடம் ரொக்கமாக 35 ஆயிரத்து 250 ரூபாய் மட்டுமே வைத்திருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.