Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 3ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 3ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Wed, 31 Aug 2022 8:31:51 PM

வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 3ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதை அடுத்து இது தொடர்பான அறிக்கையை வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வேலூர் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலூரில் உள்ள ஈ.வெ.ரா. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 3ம் தேதி அன்று காலை 10 மணிக்கு மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

private employment camp,vellore , தனியார் வேலைவாய்ப்பு முகாம் ,வேலூர்

மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் அத்துடன் டிப்ளமோ, ஐடிஐ, ஓட்டுநா் மற்றும் கணினி பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் 18 முதல் 20 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

தனியார்த்துறை நிறுவனத்தில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தொகுப்பு, புகைப்படம் மற்றும் தங்களின் கல்விச்சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். மேலும் இம்முகாமில் தனியார் நிறுவனங்களும் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அதனால் வேலையில்லா இளைஞர்கள் இம்முகாமை பயன்படுத்தி கொண்டு வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :