Advertisement

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழை

By: Karunakaran Sun, 15 Nov 2020 1:05:57 PM

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழை

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கி பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் கனமழை வெளுத்து வாங்கியது. நேற்று விட்டு விட்டு மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் அணை பகுதியில் கனமழை பெய்தது. நேற்றும் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்தது.

இதனால் பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் 100.80 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 97.83 அடியாகவும் உள்ளது. அணைக்கு 2,242.76 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 1389.75 கன நீர் வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அருவி பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை விட்டு விட்டு பெய்ததால் தீபாவளி விற்பனை சற்று பாதிக்கப்பட்டது.

rain,nellai,thoothukudi,tenkasi districts ,மழை, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள்

தீபாவளியையொட்டி தாமிரபரணி ஆற்றில் எண்ணை தேய்த்து குளிக்க மக்கள் கூட்டம் அலை மோதியது. தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், சுரண்டை, புளியங்குடி, கடையம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்தது. ஒரு சில இடங்களில் பரவலாக மழை காரணமாக தாழ்வான இடங்களில் மழை நீர் புகுந்தது. தென்காசி மாவட்டத்திலும் அணை பகுதியில் பரவலாக மழை பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஆனாலும் தடை காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாததால் அருவிக்கரைகள் வெறிச்சோடி காணப்பட்டது. அணைகளை பொறுத்தவரை 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையில் 68 அடியும், 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையில் 65 அடியும் நீர் இருப்பு உள்ளது.

Tags :
|
|