Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனா விண்வெளிக்கு அனுப்பிய ராக்கெட் பூமியில் விழுகிறது... விஞ்ஞானிகள் அச்சம்

சீனா விண்வெளிக்கு அனுப்பிய ராக்கெட் பூமியில் விழுகிறது... விஞ்ஞானிகள் அச்சம்

By: Nagaraj Sat, 05 Nov 2022 09:28:21 AM

சீனா விண்வெளிக்கு அனுப்பிய ராக்கெட் பூமியில் விழுகிறது... விஞ்ஞானிகள் அச்சம்

நியூயார்க்: சீனா விண்வெளிக்கு அனுப்பிய ராக்கெட் பூமியில் நோக்கி விழுகின்றது என்று தெரிய வந்துள்ளது. கடந்த அக்டோபர் 31ம் தேதி சீனாவின் தெற்கே வென்சாங் பகுதியில் இருந்து சுமார் 23 ஆயிரம் கிலோ எடை கொண்ட ராக்கெட்1 விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

அதில் சீனாவின் கட்டுமான பணியில் உள்ள டியான் கான் விண்வெளி நிலையத்திற்கு தேவையான மெங்சியாங் எனும் உபகரணங்களின் தொகுதி புவி வட்ட பாதை அனுப்பப்பட்டிருக்கிறது. இதன்பின் அந்த ராக்கெட் பூமியை நோக்கி விழுகின்றது. இந்த லாங் மார்ச் 5 பி என்ற ராக்கெட் ஆனது பூமியின் எந்த பகுதியில் சரியாக விழும் என்ற தகவலை இதுவரை சீனா தெரிவிக்கவில்லை.

scientists,fear,china,rocket,space,fall to earth ,விஞ்ஞானிகள், அச்சம், சீனா, ராக்கெட், விண்வெளி, பூமியில் விழுகிறது

இந்த நிலையில் இந்த ராக்கெட் ஆனது மீண்டும் பூமிக்கு திரும்பும்போது வளிமண்டலத்தில் எரிந்து சாம்பலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லாக் மார்ச் 5பி ராக்கெட் சுமார் 108 அடி நீளமும் 48,500 பவுண்டுகள் எடையும் கொண்டது. இத்தகைய அளவு கொண்ட ராக்கெட்டில் இருந்து பெரிய பாகம் வளிமண்டலத்தில் முழுவதுமாக எரியாமல் பூமியில் எங்காவது விழ கூடும்.


இருப்பினும் கடந்த காலகட்டத்தில் சீன ராக்கெட் பாகங்கள் முழுவதும் எரியாமல் அதன் பாகங்கள் பூமியில் விழுந்த அதிர்ச்சிகரமான சம்பவங்களும் நடைபெற்று உள்ளது. அதேபோல் இந்த முறை மீண்டும் நடப்பதற்கான சாத்தியம் இருக்கிறது என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.

Tags :
|
|
|
|