Advertisement

ரூ.1000 உரிமைத்தொகை இவர்களுக்கெல்லாம் இனி கிடையாதாம்

By: vaithegi Mon, 23 Oct 2023 3:16:05 PM

ரூ.1000 உரிமைத்தொகை இவர்களுக்கெல்லாம் இனி கிடையாதாம்

சென்னை: தமிழகத்தில் மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 1.06 கோடி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1000 வரவு வைக்கப்பட்டு உள்ளது. மேலும், ஒவ்வொரு மாதமும் 14 அல்லது 15 ஆம் தேதிகளில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டுவிடும் என்று முதல்வர் உத்தரவாதம் அளித்துள்ளார்.

மேலும், ஒவ்வொரு மாதமும் குடும்ப தலைவிகளின் தரவுகள் ஆய்வு செய்யப்படும் என்றும், வருமானம் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் பதிவாகி இருந்தாலும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

entitlement,head of household ,உரிமைத்தொகை , குடும்ப தலைவி

எனவே அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் உரிமைத் தொகை பெற்றவர்களில் சிலர் தவறான தகவல்களை அளித்து ரூ.1000 பெற்று உள்ளனர். குடும்ப தலைவிகளின் தரவுகள் சரிபார்க்கப்பட்டதில் 8,833 குடும்ப தலைவிகளின் பெயர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளது.

அதே போன்று, மின் கட்டணம் அதிகமாக இருந்தாலும் அடுத்தடுத்த மாதங்களில் ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவது நிறுத்தம் செய்யப்படும். எனவே, சரியான அளவில் மின்சாரத்தை பயன்படுத்தும்படி அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

Tags :