Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற ரஷ்யா கடும் தாக்குதல்

டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற ரஷ்யா கடும் தாக்குதல்

By: Nagaraj Fri, 10 June 2022 1:38:53 PM

டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற ரஷ்யா கடும் தாக்குதல்

உக்ரைன்: டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற தாக்குதல்... உக்ரைன் மீதான ரஷ்ய போர் 106 நாட்களை கடந்துள்ளது. தலைநகர் கீவை கைப்பற்ற முடியாத நிலையில் மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றியது.
தற்போது அந்த நாடு, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற முழு முழுவீச்சில் போரில் ஈடுபட்டுள்ளது.

sanctions,contribution,russia,war,extremism,world ,பொருளாதார தடை, பங்களிப்பு, ரஷ்யா, போர், தீவிரம், உலகம்

இந்த நிலையில் உக்ரைன் அதிபர் வோலோய்டிமிர் ஜெலன்ஸ்கி, (Volodymyr Zelenskyy) அமெரிக்க கார்ப்பரேட் நிறுவன தலைவர்களுடன் காணொலி காட்சி வழியாக பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “ரஷ்யா வலுவாக இருப்பதாக நினைப்பதால் போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை. நாங்கள் ரஷ்யாவை பலவீனப்படுத்த விரும்புகிறோம். உலகமும் அதைச் செய்ய வேண்டும்.
போர்க்களத்தில் செய்ய வேண்டிய பங்களிப்பை உக்ரைன் செய்து வருகிறது. ரஷ்யாவை பொருளாதார ரீதியில் இன்னும் பலவீனப்படுத்த கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

Tags :
|
|