Advertisement

எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச நியமனம்

By: Nagaraj Thu, 20 Aug 2020 7:58:17 PM

எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச நியமனம்

எதிர்க்கட்சி தலைவரானார் சஜித்... 9ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளார்.

சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இதேநேரம் புதிய சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் ஆகியோர் வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டனர். புதிய சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தனவும் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவும் அங்கஜன் இராமநாதன் குழுக்களின் பிரதி தவிசாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.


Tags :
|