Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளிகள் திறப்பில் மாற்றமில்லை... அமைச்சர் திட்டவட்டம்

பள்ளிகள் திறப்பில் மாற்றமில்லை... அமைச்சர் திட்டவட்டம்

By: Nagaraj Wed, 08 June 2022 10:55:30 AM

பள்ளிகள் திறப்பில் மாற்றமில்லை... அமைச்சர் திட்டவட்டம்

சென்னை: பள்ளிகள் திறப்பில் மாற்றமில்லை... தமிழகத்தில் உள்ள பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின், மீண்டும் வருகிற 13-ம் தேதி திறக்கப்பட உள்ளன. இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில், தற்போது கொரோனா தொற்று பரவலானது, மீண்டும் வேகம் பரவிகிறது. எனவே இதன் காரணமாக, தமிழகத்தில் திட்டமிட்டபடி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


schools,opening,unchanged,students,minister,information ,பள்ளிகள், திறப்பு, மாற்றமில்லை, மாணவர்கள், அமைச்சர், தகவல்

இதையடுத்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளதாவது, தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, திட்டமிட்டபடி 1-ஆம் வகுப்பு முதல் 10 -ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வருகிற 13-ஆம் தேதியும், பிளஸ்-2 வகுப்புக்கு 20-ஆம் தேதியும், பிளஸ்-1 வகுப்புக்கு 27-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த தேதிகளில் மாற்றம் ஏற்பட்டால் முதலமைச்சரின் அலுவலக அதிகாரிகள் தெரிவிப்பார்கள். இதன் அடிப்படையில் அப்படி பள்ளிகள் திறப்பதில், மாற்றம் இருந்தால் தெரியப்படுத்துவோம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுதாத மாணவர்கள் ஜூலை, செப்டம்பர் மாதங்களில் தேர்வு எழுத வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Tags :