Advertisement

செம ஜாலி சவாரி மாமே... மான் மீது குரங்கு செய்த சவாரி!!!

By: Nagaraj Wed, 12 Oct 2022 10:31:41 AM

செம ஜாலி சவாரி மாமே... மான் மீது குரங்கு செய்த சவாரி!!!

சென்னை: செம ஜாலி சவாரி மாமே... சென்னை ஐஐடி வளாகத்தில் மான் மீது ஜாலியாக சவாரி செய்யும் குரங்கு வீடியோ இணையத்தில் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது.

சேட்டை, சுட்டித்தனத்திற்கு உதாரணமாக பலரும் குரங்கை சொல்வார்கள். எந்த இடத்தில் இருந்தாலும் குரங்குகள் சேட்டை செய்ய தவறுவது கிடையாது. அதனை நிரூபிக்கும் வகையில் சென்னை ஐஐடி வளாகத்தில் குரங்கு ஒன்று சேட்டை செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.

viral,deer,monkey ride,video,joke ,வைரல், மான், குரங்கு சவாரி, வீடியோ, சேட்டை

அந்த வீடியோவில் மான் ஒன்றின் தோள்மீது குரங்கு தொற்றிக் கொண்டு சவாரி செய்கிறது. மான் எந்த வித குலுங்கலும் இல்லாமல் குரங்கை சுமந்து கொண்டு சவாரி செய்கிறது.


மிருக பாஷையில் அவை என்ன பேசிக்கொண்ட என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் இந்த அழகான வீடியோ பலராலும் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.

Tags :
|
|
|