Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீவிரமாய் பரவும் டெங்கு ..சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு

தீவிரமாய் பரவும் டெங்கு ..சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு

By: vaithegi Mon, 27 Nov 2023 3:25:23 PM

தீவிரமாய் பரவும் டெங்கு  ..சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாகவே தொடர்ந்து கனமழை பெய்த படியே இருந்து கொண்டு வருகிறது. இதனால், கொசுப்புழுக்களின் உற்பத்தி பெருகி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

இதனை அடுத்து மழை நீர் தெருக்களில் தேங்காத வகையில் அரசு தரப்பில் நடவடிக்கை மேற்கொண்டும் டெங்கு காய்ச்சல் அதி வேகத்தில் பரவி கொண்டு வருகிறது.

department of health,dengue ,சுகாதாரத்துறை ,டெங்கு

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 202 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

இந்த நிலையில், டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளதாகவும், சாதாரண காய்ச்சல் ஏற்பட்டாலும் மருத்துவமனையை அணுகி காய்ச்சலுக்கு தகுந்த மருந்துகளை உட்கொள்ளும்படியும் அறிவிக்கப்பட்டு உள்ளது.


Tags :