Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் மோதிய சிறிய அளவிலான விண்கல்

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் மோதிய சிறிய அளவிலான விண்கல்

By: Nagaraj Fri, 10 June 2022 1:39:05 PM

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் மோதிய சிறிய அளவிலான விண்கல்

நியூயார்க்: சிறிய விண்கல் மோதியது... ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் மீது சிறிய அளவிலான விண்கல் மோதியதாக நாசா தெரிவித்துள்ளது.
நமது பிரபஞ்சம் சுமார் 1,400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்த 'பிக் பேங்க்'(Big Bang) எனப்படும் பெருவெடிப்பு மூலம் தோன்றியதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்தும், நட்சத்திரக் கூட்டங்கள், கருந்துளைகள் உள்ளிட்டவை குறித்தும் ஆராய்வதற்காக ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி ஏவப்பட்டுள்ளது.
விண்வெளி ஆய்வில் புரட்சிகரமான முன்னேற்றத்தைக் கொண்டுவந்த ஹபிள் விண்வெளி தொலைநோக்கியின் ஆயுள் குறைவாகவே உள்ள நிலையில் அதனை ஈடு செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை கடந்த டிசம்பர் மாதம் நாசா விண்வெளி ஆய்வு மையம் விண்ணில் ஏவியது.

nasa,information,meteorite,james webb,telescope,reflector ,நாசா, தகவல், விண்கல், ஜேம்ஸ் வெப், தொலைநோக்கி, பிரதிபலிப்பான்

இந்த நிலையில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் மீது சிறிய அளவிலான விண்கல் மோதியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தற்போது நடந்த விண்கல் மோதிய நிகழ்வினால், தொலைநோக்கியின் செயல்பாடுகள் எந்தவகையிலும் பாதிக்கப்படாது என நாசா கூறியுள்ளது.
இந்த விண்கல் மோதிய சம்பவம் மே 23-க்கும் 25க்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்துள்ளது. தொலைநோக்கியின் 6.5 மீட்டர் அகல முதன்மை பிரதிபலிப்பானில் உள்ள 18 பெரிலியம் - தங்க தகடுகளில் சி-3 என்று அழைக்கப்படும் ஒரு தகட்டினை இந்த விண்கல் தாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :
|