Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சப்-இன்ஸ்பெக்டர், காவலர்களுக்கு கொரோனா; காவல் நிலையம் மூடப்பட்டது

சப்-இன்ஸ்பெக்டர், காவலர்களுக்கு கொரோனா; காவல் நிலையம் மூடப்பட்டது

By: Nagaraj Sat, 04 July 2020 1:12:23 PM

சப்-இன்ஸ்பெக்டர், காவலர்களுக்கு கொரோனா; காவல் நிலையம் மூடப்பட்டது

காவலர்களுக்கு கொரோனா... கரூரில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் சில காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் காவல்நிலையம் மூடபபட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுத்தப்படுத்தம் பணி நடைபெற்று வருகிறது.

போலீஸ் எஸ்.ஐ., ஏட்டு ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்குள், போலீசார், பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

guard,corona,police station,antiseptic,prohibition ,காவலர், கொரோனா, காவல்நிலையம், கிருமி நாசினி, தடை விதிப்பு

கரூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், எஸ்.ஐ., யுடன் பணியில் இருந்த 22 வயதுடைய போலீஸ்-நண்பர் குழுவை சேர்ந்த வாலிபர், 45 வயதுடைய அவருடைய தந்தை, 48 வயதுடைய போலீஸ் ஏட்டு ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து டவுன் போலீஸ் ஸ்டேஷனில் போலீசார், பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு, கயிறு கட்டப்பட்டது. ஸ்டேஷன் வளாகத்தில் பந்தல் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் தரப்பில் வந்த புகார் மனுக்களை பெற்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதனால், போலீஸ் ஸ்டேஷன் வளாகம் முழுவதும், நாள்தோறும் இரண்டு முறை கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|