Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மது வாங்கினால் பில் கிடைக்கும் வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் .. டாஸ்மாக் நிர்வாகம்

மது வாங்கினால் பில் கிடைக்கும் வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் .. டாஸ்மாக் நிர்வாகம்

By: vaithegi Tue, 27 June 2023 09:50:53 AM

மது வாங்கினால் பில் கிடைக்கும் வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் .. டாஸ்மாக் நிர்வாகம்

சென்னை: தமிழகத்தில் 500 மதுக்கடைகள் கடந்த 22-ம் தேதி முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கோயில்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள் பற்றி பொதுமக்கள் புகார் தெரிவித்தால், அவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் அதே சமயம் சில டாஸ்மாக் கடைகளில் மதுபானத்தின் விலையை 10 ரூபாய் அதிகம் வைத்து விற்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதனை அடுத்து இச்சூழலில் டாஸ்மாக் கடையில் நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே மதுபானங்களை விற்க வேண்டும்.

tasmac,phil ,டாஸ்மாக் ,பில்

டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கினால், பணிநீக்கம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்திருந்தார். டாஸ்மாக்கில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் டாஸ்மாக்கில் மது வாங்கினால் பில் கிடைக்கும் வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே இதற்காக ரெயில்டெல் நிறுவனத்திற்கு ரூ.294 கோடி மதிப்பிலான ஆர்டரை டாஸ்மாக் நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் மூலம் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வது தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Tags :
|