- வீடு›
- செய்திகள்›
- நாளை, டிசம்பர் 4ம் தேதி இந்த சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் மூடல்
நாளை, டிசம்பர் 4ம் தேதி இந்த சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் மூடல்
By: vaithegi Thu, 24 Nov 2022 7:06:20 PM
திருவாரூர் : டாஸ்மாக் கடைகள் மூடல் .... திருவாரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் முத்துப்பேட்டையில் இருக்கும் ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும்.
இதனை அடுத்து இந்த விழா தொடர்ந்து 14 நாட்கள் வரை நடைபெறும். அதனால் 14 நாட்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் முக்கிய நிகழ்வாக சந்தனக்கூடு நிகழ்வானது மிகவும் பிரபலமானது.
இந்த நிலையில் நடப்பு ஆண்டில் நாளை தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் சந்தனக்கூடு நிகழ்வானது டிசம்பர் 4ம் தேதி அன்று நடைபெற உள்ளது.
அதனால் இத்தினத்தை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாட உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் இவ்விழாவை கொண்டாட தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து நாளையும், டிசம்பர் 4ம் தேதியும் முத்துப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூட அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.