இந்த மாவட்டத்தில் அக்.24ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்
By: vaithegi Fri, 21 Oct 2022 7:49:59 PM
சிவகங்கை : அக்.24ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல் ... தமிழகத்தில் அக்டோபர் 2ம் நாள் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 9ம் தேதி மிலாடி நபியை முன்னிட்டும் மது விற்பனை தடை செய்யப்பட்டது.
இதனை அடுத்து இது குறித்து அந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பை வெளியிட்டனர். இந்த உத்தரவை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர்கள் மீது சட்ட நீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து அதன் தொடர்ச்சியாக இந்த மாதத்தில் 3 – வது முறையாக சிவகங்கை மாவட்டத்தில் வரும் 24ம் தேதி மது கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் திருப்பத்தூரில் மாமன்னர் மருது பாண்டியர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் மதுக்கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்கள் மூடப்படும் என்று அந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால் மதுபிரியர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.