டாட்டா காட்டி விட்டு ராஜினாமா செய்தார் வாட்ஸ் அப் தலைமை அதிகாரி
By: Nagaraj Wed, 16 Nov 2022 9:33:49 PM
புதுடில்லி: வாட்ஸ் ஆப் இந்தியத் தலைமை அதிகாரியாக இருந்த அபிஜித் போஸ் ராஜினாமா செய்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
சில நாட்களுக்கு முன் அப்பொறுப்பில் இருந்த அஜித் மோகன் ராஜினமாமா செய்ததையடுத்து அபிஜித் போஸ் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
தற்போது அவரும் மெட்டா நிறுவனத்தின் பொதுக் கொள்கை இயக்குனரான ராஜீவ் அகர்வாலும் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்துள்ளனர். இதனையடுத்து ராஜீவ் அகர்வாலுக்கு மாற்றாக சிவநாத் துக்ரால் நியமிக்கப்பட்டிருப்பதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் முக்கியக் கொள்கை முடிவுகளை சிவநாத் எடுத்து அதனைத் தலைமையேற்று நடத்திச் செல்வார் என்று மெட்டா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.