Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆசிரியர் தகுதித் தேர்வு ... முதல் தாள் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

ஆசிரியர் தகுதித் தேர்வு ... முதல் தாள் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

By: vaithegi Mon, 10 Oct 2022 3:51:48 PM

ஆசிரியர் தகுதித் தேர்வு ...   முதல் தாள் ஹால்டிக்கெட்  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

சென்னை: 2022 ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வின் கணினி வழியில் நடத்தப்படும் தாள்-I தேர்விற்கான கால அட்டவணையை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும், தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்களின் விவரங்களும் வெளியாகியுள்ளன.

இதனை அடுத்து விண்ணப்பதாரர்கள் தங்களது பயணர் எண் மற்றும் கடவுச் சொல்லை பதிவிட்டு தங்களது அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்ட அனுமதிச் சீட்டு 1- ஐ (District Admit Card-I) தனியாகவும், தேர்வு மையம் (இடம்) குறிப்பிடும் அனுமதிச் சீட்டு-2 (Venue - Admit Card-II) தனியாகவும் வெளியிடுகிறது.

teacher eligibility test,hall ticket ,ஆசிரியர் தகுதித் தேர்வு,ஹால்டிக்கெட்

www.trb.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வர்கள் தங்களது User Id மற்றும் கடவுச் சொல் (Password) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனுமதிச் சீட்டு-2 (Venue - Admit Card-II) திட்டமிடப்பட்ட தேர்வு தேதிக்கு 3 நாட்களுக்கு முன்னதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தாண்டு கணினிவழித் தேர்வாக (Computer Based Examination) நடத்தப்படுவதால், பயிற்சித் தேர்வு (Practice Test) மேற்கொள்ள விரும்பும், தேர்வர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி வரும் 12ம் தேதி முதல் trbpracticetest என்ற போர்ட்டலில் பயிற்சித் தேர்வை தேர்வர்கள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :