Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாஃப்டா கூட்டாளர்களுடனான சந்திப்பில் பிரதமர் ட்ரூடோ பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு

நாஃப்டா கூட்டாளர்களுடனான சந்திப்பில் பிரதமர் ட்ரூடோ பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு

By: Nagaraj Tue, 07 July 2020 5:41:29 PM

நாஃப்டா கூட்டாளர்களுடனான சந்திப்பில் பிரதமர் ட்ரூடோ பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு

பிரதமர் பங்கேற்க மாட்டார்... நாஃப்டா கூட்டாளர்களுடனான சந்திப்பில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துக் கொள்ள மாட்டார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மெக்ஸிகன் ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருடனான சந்திப்பில் கலந்து கொள்ளலாமா என்பது குறித்து சில விவாதங்களுக்குப் பிறகு வொஷிங்டன் டி.சி.க்கான பயணத்தை ட்ரூடோ இரத்து செய்துள்ளார்.

nafta,partners,prime minister,cabinet,discussion ,நாஃப்டா, கூட்டாளர்கள், பிரதமர், அமைச்சரவை, கலந்துரையாடல்

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புதன்கிழமை கூட்டத்தில் அமெரிக்காவையும் மெக்ஸிகோவையும் நன்றாக வாழ்த்துகிறோம்.

கனடாவின் பங்கேற்பு குறித்து அண்மையில் கலந்துரையாடல்கள் நடந்தாலும், திட்டமிடப்பட்ட அமைச்சரவைக் கூட்டங்களுக்கும், நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட நாடாளுமன்றக் கூட்டங்களுக்கும் பிரதமர் இந்த வாரம் ஒட்டாவாவில் இருப்பார்.

கனடா தொடர்ந்து தங்கள் நாஃப்டா கூட்டாளர்களுடன் இணைந்து செயற்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|